பெண்களுக்கும் குடிக்க உரிமை உண்டு... பிரபல இயக்குநருக்கு பாடகி பதிலடி...!

"இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார் ராம்கோபால் வர்மா.

பெண்களுக்கும் குடிக்க உரிமை உண்டு... பிரபல இயக்குநருக்கு பாடகி பதிலடி...!
இயக்குநர் ராம்கோபால் வர்மா
  • Share this:
டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கும் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு, இன்னும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று நாம் பேசி வருவதாக ராம் கோபால் வர்மா கருத்து பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு பிரபல பாடகி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களை இயக்கிவர் ராம்கோபால் வர்மா. சூர்யாவின் ரத்த சரித்திரம் படத்தை இயக்கிய இவர், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கினார். தொடர்ந்து சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். தனது படங்களுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையை உருவாக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் விளக்கேற்றச் சொன்னார் இந்திய பிரதமர். அதை திரைத்துறை பிரபலங்கள் கடைபிடித்து பலரும் விளக்கேற்றிய நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா, சிகரெட்டைப் பற்ற வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.


இந்நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் பெண்கள் வரிசையாக காத்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, பாருங்க யாரு மதுபானக் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார் ராம்கோபால் வர்மா. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் பதிவிட்டனர்.ராம்கோபால் வர்மாவின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் பிரபல இந்தி பாடகி சோனா மொகப்த்ரா, “குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு. ஆண்களை போலவே பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும் உரிமை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading