Swarnalatha : 'உலகையே மயக்கிய குரலழகி' சுவர்ணலதா!

சுவர்ணலதா

80 களின் இறுதியில் தொடங்கி அடுத்த 20 ஆண்டுகள் தன் இன்னிசை ரீங்காரத்தால் இசை ரசிகர்கள் மனங்களில் நீங்காமல் ஒலித்துக்கொண்டே இருந்த பெயர் ஸ்வர்ணலதா

  • Share this:
    தமிழ் திரை இசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவருக்கும் ஆஸ்தான பாடகி பட்டியலில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" தான் இந்த பாட்டு பறவையின் முதல் பாடலானது. அப்போது அவருக்கு வயது 14.

    இந்த சின்னசிறிய குயிலின் குரல் இளையராஜாவிற்கு பிடித்து போக தான் இசையமைத்த ‘’குரு சிஷ்யன்’ திரைப்படத்தில் "உத்தம புத்திரி நானு" என்ற பாடலைப் பாட வாய்ப்பளித்தார். தொடர்ந்து இளையராஜாவின் மந்திர மெட்டுக்களோடு தன் தேன் குரலை குழைத்து பரிமாரிய ஸ்வர்ணலதா உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார்..

    கேட்போரை இப்பிரபஞ்சத்தோடு இணைக்க வைத்த மாயத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது ஸ்வர்ணலதாவின் குரல். வள்ளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற "என்னுள்ளே என்னுள்ளே பாடல், இன்று வரை கேட்கும் ரசிகர்களை கறைய வைக்கும் பாடலாகவே இருந்துவருகிறது.

    ALSO READ : குக்வித் கோமாளி ஷிவாங்கியின் புதிய சாதனை

    ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பிறகு ஸ்வர்ணலதாவின் வெற்றியின் வீச்சு பல மடங்கு உயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உசிலம்பட்டி பெண் குட்டி” பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்வர்ணலதா பாடிய முதல் பாடலாக அமைந்தது. அதன்பின் ஏராளமான வெற்றி பாடல்களை ரகுமான் இசையில் கொடுத்தார் ஸ்வர்ணலதா. ’கருத்தம்மா’ திரைப்படத்தில் ஸ்வர்ணலதா பாடிய "போறாளே பொன்னுத்தாயி’ பாடலுக்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் வென்றார் ஸ்வர்ணலதா.



    தேவா, வித்யாசாகர், ஹாரீஸ் ஜெயராஜ், S.A .ராஜ்குமார்,. உட்பட அத்தனை இசையமைப்பாளர்கள் இசையிலும் ரசிக்கும்படியான பாடல்களை பாடினார். ஸ்வர்ணலதாவின் வாழ்வில் 2008-ல் வெளியான 'பீமா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரங்கு ரங்கம்மா' பாடல் கடைசிப் பாடலாக அமைந்தது.

    உலகையே மயக்கிய குரலழகி ஒரு கட்டத்தில் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். காற்றின் அலைகளாய் இசை ரசிகர்களை ஆட்கொண்ட குரல், ஒருநாள் அந்தக் காற்றிலேயே கரைந்து போனது.
    Published by:Sankaravadivoo G
    First published: