Home /News /entertainment /

பிசாசு 2 செகண்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிசாசு 2 செகண்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிசாசு 2 பாடல்

பிசாசு 2 பாடல்

மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பிசாசு-2  திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 25ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா நாயகியாக  நடித்திருக்கும் அந்த திரைப்படமும் திகில் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அதேபோல் சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிடப்பட்ட முதல் பாடலுக்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.  இந்த நிலையில்  நெஞ்சை கேளு என தொடங்கும் இரண்டாவது பாடலை ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

மிஷ்கின் இயக்கத்தில் ராக்போர்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 
Published by:Shalini C
First published:

Tags: Andrea Jeramiah

அடுத்த செய்தி