Home /News /entertainment /

முன்னணி பத்திரிக்கை வெளியிட்ட செய்திக்கு இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

முன்னணி பத்திரிக்கை வெளியிட்ட செய்திக்கு இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின்

விமர்சிப்பது அனைவரின் உரிமை; உரிமை மீறலை நான் ஒருபோதும் அனுமதிப்பது கிடையாது என இயக்குனர் மிஷ்கின் அறிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திரைப்படங்களை விமர்சனம் செய்வது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்திருக்கிறார். 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மிஷ்கின், தற்போது பிசாசு-2 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  இந்த நிலையில் சமீபத்தில் வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என மிஷ்கின் கூறியதாக குறிப்பிடப்பட்டது.  இதற்கு இயக்குனர் மிஷ்கின் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டதை பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன்.  தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென,  நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள்.  நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் என் படத்தை பாருங்கள், படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். படம் நன்றாக இல்லை எனில் கடுமையாக விமர்சியுங்கள் எனவும்  கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோழா சோழா பாடலின் மேக்கிங் வீடியோ!

Director Mysskin's Statement Regarding Kumudham Article, Director Mysskin, குமுதம் மிஷ்கின், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் மிஷ்கின் படங்கள், mysskin directed movies, director mysskin family, mysskin latest movie, mysskin upcoming movie, mysskin best movies, mysskin movies imdb, mysskin movies list tamil, mysskin wife photos,

அத்துடன் இந்த கருத்தை இப்போது அல்ல, என் முதல் படத்தில் இருந்தே இதை சொல்கிறேன்.  விமர்சிப்பது அனைவரின் உரிமை,  மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன் என்றும் மிஷ்கின் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் வரும் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தது.

 
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி