அஜித்தின் அடுத்த படம்... சென்னையில் படக்குழு திடீர் ஆலோசனை

அஜித்தின் அடுத்த படம் குறித்த ஆலோசனையில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த படம்... சென்னையில் படக்குழு திடீர் ஆலோசனை
நடிகர் அஜித்
  • News18
  • Last Updated: November 15, 2018, 3:43 PM IST
  • Share this:
அஜித்தின் அடுத்த படம் குறித்த ஆலோசனையில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

விஸ்வாசம் படத்தில் தனது பணியை முழுமையாக முடித்துக் கொடுத்திருக்கும் அஜித் தற்போது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு சென்னையிலுள்ள போனி கபூர் வீட்டில் அஜித் , படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.




அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் படத்தை தமிழுக்கு ஏற்றவாறு இயக்குநர் ஹெச்.வினோத் மாற்றியுள்ளார். இந்தப் பணிகள் முடிவடைந்திருப்பதால் படப்பிடிப்பு குறித்த ஆலோசனையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

News18 Tamil Appசெய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்- அரசியல் தலைவர்கள் கருத்து - வீடியோ

First published: November 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading