போனி கபூர் கொடுத்த ஒரே ஒரு அப்டேட்... இணையத்தில் ட்ரெண்டிங்!

போனி கபூர் கொடுத்த ஒரே ஒரு அப்டேட்... இணையத்தில் ட்ரெண்டிங்!
தயாரிப்பாளர் போனி கபூர்
  • Share this:
பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு ‘வக்கீல் சாப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியில் அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பிங்க். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியிருந்தனர். மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.

இத்திரைப்படம் தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித், வித்யாபாலன் உள்ளிட்டோரின் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு நேர்கொண்ட பார்வை என்ற டைட்டிலுடன் கடந்த ஆண்டு வெளியானது. இந்தியைப் போன்றே தமிழிலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.


ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இந்தப் படத்துக்கு ‘வக்கீல் சாப்’ என்று பெயரிடப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் அதில், பவன் கல்யாண் ஸ்டைலாக புத்தகம் படிப்பது போல் தோன்றியுள்ளார். திரையுலகிலிருந்து விலகி அரசியல் களத்துக்குச் சென்ற பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படமாக வக்கீல் சாப் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இந்திய அளவிலான ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனமும், போனி கபூரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.


இந்தப் படம் மட்டுமின்றி தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

மேலும் படிக்க: நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா... லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading