Oviya: ஆண் நண்பருடன் நெருக்கமான படங்கள்: காதலில் விழுந்தாரா ஓவியா?

Oviya: ஆண் நண்பருடன் நெருக்கமான படங்கள்: காதலில் விழுந்தாரா ஓவியா?

ஆண் நண்பருடன் ஓவியா

ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஓவியாவின் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

  • Share this:
    ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஓவியாவின் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

    'களவாணி', 'மெரினா', 'கலகலப்பு' மற்றும் 'யாமிருக்க பயமேன்' போன்ற பல படங்களில் ஒவியா தனது தனித்துவமான நடிப்பை வழங்கியுள்ளார். இருப்பினும், 'பிக் பாஸ்' சீசன் ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் அவரது உண்மையான குணத்தை பற்றி மக்கள் அறிந்து கொண்டனர். இது அவருக்கு எண்ணற்ற ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது. அந்த ரசிகர்கள் இன்னும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

    'பிக் பாஸ் 1' டைட்டில் வெற்றியாளர் ஆரவ் உடன் திரை மறைவில் காதலில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருடன் நேரடி உறவில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் அதை மறுத்து, தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று தெரிவித்தனர். இதற்கிடையே சமீபத்தில் ஆரவ் நடிகை ரஹேயை மணந்தார். ஓவியா அவருக்கு திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தான் கேரளாவில் இருப்பதால் அவரது திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி 14-ம் தேதி ஆண் ஒருவருக்கு தான் முத்தம் கொடுக்கும் படத்தைப் பகிர்ந்த ஓவியா, ‘லவ்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் காதலில் விழுந்து விட்டதாகக் கணித்தனர். சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது அதே நபருடன், ஒவியா மிக நெருக்கமாக இருக்கும் படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன. அழகான நடிகை ஒரு வலுவான உறவில் இறங்கியிருக்கிறாரா என்ற ஊகங்களுக்கு இந்தப் படங்கள் இன்னும் வலு சேர்க்கிறது. இருப்பினும் தங்களுக்கு விரைவில் நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஓவியா ஆர்மியினர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: