ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகரை தூக்கி போட்டோ எடுத்த நடிகர் விஜய்.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

ரசிகரை தூக்கி போட்டோ எடுத்த நடிகர் விஜய்.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

Actor Vijay | நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களுடன் இன்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் தன்னுடைய மாற்றுத்திறனாளி ரசிகரை தூக்கிக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களுடன் இன்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அதில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர்,  திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 400 ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அந்த விழாவிற்காக சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு விஜய் வந்தார். அப்போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் மாற்றுத்திறனாளி ரசிகரை பார்த்த விஜய்,  அவரை தூக்கி கொண்டு புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய்யின் இந்த செயலால் அந்த மாற்றுத்திறனாளி ரசிகர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

படங்களைப் பொறுத்தவரை இயக்குனர் வம்ஷி  இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது.

ரீ ரிலீஸ் ட்ரெண்டை தொடங்கிவைத்த ரஜினியின் ‘பாபா’… அஜித், விஜய் படங்கள் மீண்டும் திரையிட வாய்ப்பு…

வாரிசுக்குப் பிறகு, தளபதி விஜய் முன்னதாக மாஸ்டர் படத்தில் பணியாற்றிய லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு குறித்து ஜனவரி 2023-ல் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Actor Vijay