ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்ரீதேவியின் மருமகன் இவரா? மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய போனி கபூர்?

ஸ்ரீதேவியின் மருமகன் இவரா? மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய போனி கபூர்?

போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர்

போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர்

சமீபத்தில் ஜான்வி - ஷிகர் இருவரும் ஒன்றாக மாலத்தீவு சென்றுவந்ததாக தகவல் பரவியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தமிழில் நடிகர் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இதில் நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை  வெளியிடும் பணிகளில் போனி கபூர் ஈடுபட்டுவருகிறார். ஹிந்தியிலும் அவரது மகன் அர்ஜூன் கபூர், மகள் ஜான்வி ஆகியோர் நடிக்கும் படங்களை போனி கபூர் தயாரித்துவருகிறார்.

போனி கபூரின் மூத்த மகள் ஜான்வியும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்துவருவதாக கூறப்படுகிறது.

அவ்வப்போது முக்கிய நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்து பங்கேற்றுவந்தனர். சமீபத்தில் ஜான்வி - ஷிகர் இருவரும் ஒன்றாக மாலத்தீவு சென்றுவந்ததாக தகவல் பரவியது. அதற்கேற்ப இருவரும் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

இந்த நிலையில் போனி கபூரின் சகோதரரும் நடிகருமான அனில் கபூரின் பிறந்த நாள் விழாவில் ஷிகர் பஹாரியாவும் கலந்துகொண்டுள்ளார். விழாவில் போனி கபூர் தனது மகளின் காதலரான ஷிகர் பஹாரியாவின் தோளில் கைபோட்டு பேசிக்கொண்டிருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனையடுத்து மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் போல என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

First published:

Tags: Boney Kapoor, Janhvi kapoor