‘தளபதி 63'... வீல் சேரில் விஜய், முகத்தில் காயங்களுடன் மற்ற நடிகைகள்...!

மூன்று நாட்களுக்கு முன் விஜய் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது

‘தளபதி 63'... வீல் சேரில் விஜய், முகத்தில் காயங்களுடன் மற்ற நடிகைகள்...!
நடிகர் விஜய்
  • News18
  • Last Updated: May 10, 2019, 10:44 AM IST
  • Share this:
தளபதி 63 படத்தில் நடிக்கும் இந்துஜாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் மூன்றாவதாக தயாராகி வரும் படம் தளபதி 63. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் படக்குழுவுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.



மூன்று நாட்களுக்கு முன் விஜய் வீல் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியான நிலையில் தற்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபடும் நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை இந்துஜாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதேபோல் மற்ற நடிகைகளின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.



அந்த புகைப்படங்களில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ள நடிகைகளின் முகங்களில் காயங்கள் ஏற்பட்டது போல இருக்கிறது.

First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்