சிவகார்த்திகேயன் புதிய படத்தின் ஃபோட்டோ ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே 8-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் புதிய படத்தின் ஃபோட்டோ ரிலீஸ்!
டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
  • News18
  • Last Updated: June 28, 2019, 5:52 PM IST
  • Share this:
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். SK16 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப்படத்தில் சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.


படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மற்றும் சதுரங்கவேட்டை பட நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு மே 8-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில்  சூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் படம் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்

First published: June 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading