ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இவ்வளவு கெடுபிடியிலும் வெளியான நயன்தாரா திருமண விழா ஃபோட்டோ!! என்ன தெரியுமா?

இவ்வளவு கெடுபிடியிலும் வெளியான நயன்தாரா திருமண விழா ஃபோட்டோ!! என்ன தெரியுமா?

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

Nayanthara Wedding : விழாவில் பங்கேற்பவர்களுக்கு செல்ஃபோன் பயன்படுத்த, ஃபோட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செல்போன், புகைப்படங்களுக்கு நயன்தாராவின் திருமணத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையும் மீறி திருமணம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு ஃபோட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ரிசார்ட்டில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்கு ரஜினி, கமல், அஜித், விஜய், முதல்வர் ஸ்டாலின், ஷாரூக்கான் உள்பட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விழாவில் பங்கேற்பதற்காக ஷாரூக்கான் இன்று காலையிலேயே சென்னைக்கு வந்து திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க - நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விழாவின் முக்கிய நிகழ்வுகள்!

இந்த நிலையில் அஜித் திருமண விழாவில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். ஆனால், அஜித் குடும்பத்தினர் ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் ஷாலினி சகோதரி ஷாமிளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக 25  புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.

நிகழ்ச்சியில்  நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய் சேதுபதி, வசந்த் ரவி, பொன்வண்ணன்,  இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், அட்லீ, நெல்சன் தயாரிப்பாளர்கள் லலித் குமார், போனி கபூர், டிரைடன் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க - Nayanthara vignesh wedding: நயன்தாரா திருமணம் நடக்கும் பகுதியில் பொது மக்களை அனுமதிக்க மறுக்கும் தனியார் காவலர்கள்

விழாவில் பங்கேற்பவர்களுக்கு செல்ஃபோன் பயன்படுத்த, ஃபோட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் நயன்தாரா திருமண விழா விருந்தில் இடம்பெறும் லஞ்ச் மெனு கார்டு வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த கார்டில் சைவ உணவுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சைவம் மட்டும்தானா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Director vignesh shivan, Nayanthara