’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர் - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

பேட்ட படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவலை இன்று வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

news18
Updated: December 4, 2018, 1:51 PM IST
’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர் - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
பேட்ட - விஜய் சேதுபதி - ரஜினிகாந்த்
news18
Updated: December 4, 2018, 1:51 PM IST
பேட்ட படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவலை இன்று வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான 'மரண மாஸ்' பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்துக்கு முதன்முறையாக இசையமைத்துள்ள அனிருத், மரணமாஸ் பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் சென்னைத் தமிழில் குத்துப் பாடலாக உருவாகியுள்ளது.

இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை இன்று மாலை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அதற்கான பதில் இன்று மாலை தெரிந்துவிடும்.

டிக் டொக்கின் போது கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர் - வீடியோ

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...