பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் இதுதான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பேட்ட படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

news18
Updated: December 4, 2018, 6:10 PM IST
பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் இதுதான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பேட்ட - விஜய் சேதுபதி
news18
Updated: December 4, 2018, 6:10 PM IST
பேட்ட படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பேட்ட படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான 'மரண மாஸ்' பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்துக்கு முதன்முறையாக இசையமைத்துள்ள அனிருத், மரணமாஸ் பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் சென்னைத் தமிழில் குத்துப் பாடலாக உருவாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் அவர் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Loading...


காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...