பேட்ட: இரண்டாவது பாடல் - சீக்ரெட் உடைத்த அனிருத் - வீடியோ

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகயுள்ள பேட்ட படத்தின் இரண்டாவது பாடலுக்கான ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

news18
Updated: December 7, 2018, 6:15 PM IST
பேட்ட: இரண்டாவது பாடல் - சீக்ரெட் உடைத்த அனிருத் - வீடியோ
இசையமைப்பாளர் அனிருத்
news18
Updated: December 7, 2018, 6:15 PM IST
பேட்ட படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சிங்கார் சிங் என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

வரும் 9-ம் தேதி இசைவெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் படத்தின் முதல் பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ‘மரணமாஸ்’ என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் பாடலைத் தொடர்ந்து ‘உல்லால்லா’ என்று தொடங்கும் படத்தின் இரண்டாவது பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Petta - Vijay Sethupathi
Loading...


இந்தப் பாடலுக்கான ஸ்னீக் பீக் காட்சியையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். அதில் பேசியிருக்கும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தில்லு முல்லு படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவையைப்போல் பைலா பாடல் அமைத்திருப்பதாக கூறியுள்ளார்.கொடி கட்டிப் பறக்கும் போலி பவர் பேங்க் விற்பனை - அதிர்ச்சி வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...