பேட்ட படத்தில் பாலிவுட் நடிகரின் கேரக்டர் இதுதான்! - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

பேட்ட படத்தில் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது

news18
Updated: December 5, 2018, 6:55 PM IST
பேட்ட படத்தில் பாலிவுட் நடிகரின் கேரக்டர் இதுதான்! - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
நடிகர் நவாசுதீன் சித்திக்
news18
Updated: December 5, 2018, 6:55 PM IST
பேட்ட படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகரின் கதாபாத்திரப் பெயரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி படத்தின் முதல் பாடலான மரண மாஸ் பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ரஜினிகாந்தின் ஆஸ்தான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் அனிருத் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது.

Loading...
நடிகர் விஜய்சேதுபதி இந்தப் படத்தில் ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறிய படக்குழு, பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிங்கார் சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Also Watch:
திரைப்படங்களை வெற்றியடைய செய்ய ரஜினிகாந்த் கையாண்ட விதம்! 


First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...