வெளியானது பேட்ட, விஸ்வாசம் - சென்னையில் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

Petta and Visawasam | சிலர் தியேட்டரில் பேட்ட பேனரை சிலர் கிழித்தனர். ஆனால், படம் ஓடிக்கொண்டிருந்ததால் ரஜினி ரசிகர்கள் யாரும் அங்கு இல்லை. இதனை அடுத்து, காவல்துறையினர் அனைவரையும் அரங்க வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 7:16 AM IST
வெளியானது பேட்ட, விஸ்வாசம் - சென்னையில் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
பேட்ட , விஸ்வாசம் பட போஸ்டர்
Web Desk | news18
Updated: January 10, 2019, 7:16 AM IST
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் இன்று வெளியானது. சென்னையில் உள்ள தியேட்டரில் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாரான பேட்ட, அஜித்குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் தயாரான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் இன்று காலை வெளியானது.

சென்னை காசி திரையரங்கில் தப்பாட்டம் , கரகாட்டம் ஆடி ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். காசி திரையரங்கில் பேட்ட திரைப்படத்தை காண இயக்குநர் கார்த்தி சுப்புராஜ், பாபி சிம்ஹா வந்தனர்.

“ரசிகர்களோடு ஒரு ரசிகனாக பேட்ட திரைப்படத்தை காண வந்தேன். சிறு வயதிலிருந்து ரஜினி ரசிகனாக இருந்த நான் ஒரு ரசிகனாக தான் பேட்ட திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்” என்று இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் கூறினார்.

நெல்லை, மதுரை என்று அனைத்து இடங்களிலும் காலை முதலே ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தங்களது ஆதர்ச நாயகனின் படத்தைக் காண திரண்டு வந்திருந்தனர். சென்னை
ரோகினி திரையரங்கில் பேட்ட திரைப்படம் 4 மணிக்கும் விஸ்வாசம் திரைப்படம் 7 மணிக்கும் காட்சியிடப்பட இருந்தது.

ரசிகர்களை வெளியேற்றிய போலீசார்
Loading...
விசுவாசம் படத்தையும் 4 மணிக்கு திரையிட சொல்லி ரகளையில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் வாயிற்காவலர்களை மீறி திரையரங்கிற்குள் நுழைந்தனர். இதனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை காவல்துறையினர் பின்னர் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது, காவல்துறையினருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

அப்போது, சிலர் தியேட்டரில் பேட்ட பேனரை சிலர் கிழித்தனர். ஆனால், படம் ஓடிக்கொண்டிருந்ததால் ரஜினி ரசிகர்கள் யாரும் அங்கு இல்லை. இதனை அடுத்து, காவல்துறையினர் அனைவரையும் அரங்க வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். அப்போது, ரசிகர்கள் சாலையில் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காவல்துறையினர் ரசிகர்களை கலைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனை அடுத்து அங்கு அமைதி திரும்பியது.

வசூலில் படம் தோல்வி... சம்பள பாக்கியை வாங்க மறுத்த சாய் பல்லவி

அஜித் ரசிகர்களுக்கு பிரபல தியேட்டர் தரும் டபுள் ட்ரீட்!

Also See...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...