முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு!

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு!

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது  என்றும் கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் மோகன் ஜி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை  உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பழைய வண்ணாரபேட்டை, திரௌபதி ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தை தனது ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மோகன் ஜி தயாரித்தும் உள்ளார். நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

மதமாற்றம், பி.சி.ஆர். சட்டத்தை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஸ்நீக் பீக் வீடியோ நேற்று வெளியாகி இருந்தது. அதில்,  கிருஸ்துவ பாதிரியாரான மனோபாலா பண வசூலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: பிருத்விராஜின்  ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமார்!

இந்நிலையில், ருத்ர தாண்டவம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: தி நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் மாரி செல்வராஜின் கர்ணன்!

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது  என்றும்  சிறுபான்மை கிருஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக  நாளைக்குள் பதில் அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Case, Court, Movie