நான் ஒரு தமிழ்ப்பெண்; எனக்கு என் கணவர் வேண்டும் - பீட்டர் பாலின் முதல் மனைவி கோரிக்கை

எனக்கு என்னுடைய கணவர் வேண்டும் என்று பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறியுள்ளார்.

நான் ஒரு தமிழ்ப்பெண்; எனக்கு என் கணவர் வேண்டும் - பீட்டர் பாலின் முதல் மனைவி கோரிக்கை
வனிதா - பீட்டர்பால் தம்பதி
  • Share this:
தமிழ் சினிமாவில், விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, அதன் பின், பல படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக வலம்வர முடியாமல் போனது.

இரண்டு முறை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார். விஜயகுமாருடன் சொத்து பிரச்னை ஏற்பட்டு ஆணையர் அலுவலகம் வரை புகார் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதும் சர்ச்சை நாயகியாவே வலம் வந்தார். தற்போது, யூடியூப் சேனல் ஒன்றில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வரும் இவர், தனக்கு உதவியாக இருந்த சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பாலை கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபத் ஹெலன், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளார். ஆனால் இருவருக்கும் தற்போது வரை விவாகரத்து ஆகாத நிலையில், வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

எலிசபெத் ஹெலன் சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் திருமணம் நடப்பதற்கு முன்பாகவே 19-ம் தேதியே காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.

விவாகரத்து வாங்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன். 27-ம் தேதி அன்று கேக் மட்டும் வெட்டிக் கொள்கிறோம் என்று காவல்நிலையத்துக்கு வந்து எனது கணவர் பீட்டர் போலீசாரிடம் சொன்னார். ஆனால் கேக் எல்லாம் வெட்டக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். இப்போது ஷூட்டிங்குக்காக கேக் வெட்டியதாக சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் இருக்கும் குடியிருப்பில் திருமணத்துக்காக அனைவரையும் அழைத்திருக்கிறார்கள். நான் ஒரு கோடி கேட்டேன் என்கிறார்கள். நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. ஒரு கோடி கேட்டேன் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? நான் சட்டரீதியாக திருமணம் செய்திருக்கிறேன். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்தேன் என்று அவர்கள் சொன்னதற்கு ஆதாரம் என்ன உள்ளது?



எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தான் ஊடகங்களிடம் விளக்கியுள்ளேன். எனக்கு என் கணவர் வேண்டும். நான் ஒரு தமிழ்ப் பெண். அவர் இல்லாமல் நாங்கள் இல்லை. அவருடைய திருமணம் செல்லாது” என்று கூறியுள்ளார்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading