வனிதா விவகாரம் - லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர் பாலின் முதல் மனைவி

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் மன்னிப்பு கோரியுள்ளார்.

வனிதா விவகாரம் - லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர் பாலின் முதல் மனைவி
எலிசபெத் ஹெலன் | லட்சுமி ராமகிருஷ்ணன்
  • Share this:
தன்னுடன் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதா விஜயகுமாரை பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டதாக எலிசபெத் ஹெலன் குற்றம்சாட்டியதை அடுத்து வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணத்தை பலரும் சமூகவலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

திரைத்துறை பிரபலங்களான நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்த்ர சந்திரசேகர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நாஞ்சில் விஜயன், யூடியூப் சேனல் நடத்தும் சூர்யா தேவி உள்ளிட்டோர் வனிதாவுக்கு எதிராகவும், எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் நேரலை ஒன்றில் இணைந்த வனிதா விஜயகுமார், தேவையில்லாமல் பிரச்னை என்னவென்றே தெரியாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கடுமையான வாக்குவாதம் செய்து எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் எலிசபெத் ஹெலன் கூறியிருப்பதாவது, லட்சுமி ராமகிருஷ்ணன் எங்களுக்கு ஆதரவாக பேசினார்கள். நாங்கள் சொல்லித் தான் அவர் பேசினார். ஆனால் வனிதா அவர்களை தவறாகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும் பேசி கஷ்டப்படுத்தி உள்ளார். எங்களுக்காக லட்சுமி ராமகிருஷ்ணன் உதவி செய்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நினைத்து எங்களுக்கு கஷ்டமாக உள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணனின் வயதுக்குக் கூட வனிதா மரியாதை கொடுக்கவில்லை. எங்களால் தான் அவருக்கு இந்த அவமதிப்பு ஏற்பட்டது. வனிதா செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வனிதா அப்படி பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணனுகு நன்றி” என்று கூறியுள்ளார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading