• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 1.6 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் பீட்டர் ஜாக்சனின் Weta நிறுவனம்!

1.6 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் பீட்டர் ஜாக்சனின் Weta நிறுவனம்!

குல்லம்

குல்லம்

பீட்டர் ஜாக்சன் இயக்கிய லார்ட் ஆஃ;ப் தி ரிங்ஸ் படத்தின் பிரமாண்ட ஸிஜி வேலைகள், அதேபோல் பல படங்கள் உருவாக தொடக்கப் புள்ளியாக அமைந்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் பீட்டர் ஜாக்சன் பிரதான பங்குதாரராக இருக்கும் வீட்டா டிஜிட்டல் நிறுவனம் 1.625 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுகிறது. 

வீட்டா டிஜிட்டல் நியூசிலாந்தை மையமாக கொண்டு இயங்கி வந்த நிறுவனம். ஹாலிவுட்டில் தயாரான பீட்டர் ஜாக்சன் இயக்கிய லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் படத்தின் ஸிஜி வேலைகளை கவனித்தது இந்நிறுவனம்தான். முக்கியமாக அந்த ட்ரையாலஜியில் வரும் குல்லம் (Gollum) கதாபாத்திரத்தை இந்நிறுவனம் உருவாக்கியது. அவதார், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் படங்களில் வரும் கதாபாத்திரங்களும் இங்குதான் உருவாக்கப்பட்டன

பீட்டர் ஜாக்சன் இயக்கிய லார்ட் ஆஃ;ப் தி ரிங்ஸ் படத்தின் பிரமாண்ட ஸிஜி வேலைகள், அதேபோல் பல படங்கள் உருவாக தொடக்கப் புள்ளியாக அமைந்தன. இதில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் துல்லியத்தை பார்த்த பிறகே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 'தி அட்வென்ஜர்ஸ் ஆஃப் டின்டின்' படத்தை எடுக்க முடிவு செய்தார்

Also read... சந்தானத்தின் சபாபதி ஹாலிவுட் காப்பியா?

இந்த நிறுவனத்தை வீடியோ கேம் சாப்ட்வேர்கள் தயாரிக்கும் யூனிட்டி என்ற நிறுவனம் வாங்குகிறது. வீட்டாவின் விஷுவல் எபெக்ட் பிரிவு, வீட்டாஎஃப்எக்ஸ் என்ற பெயரில் தனியாக இயங்கும். யூனிட்டியின் முக்கிய கஸ்டமாராக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: