விலங்குகளின் நலனுக்காக மீண்டும் நிர்வாண புகைப்படங்களை எடுங்கள் என்று நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சமீபத்தில் ரன்வீர் சிங் நிர்வாண ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இந்தி திரையுலகமே ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இருந்தது.
இருப்பினும், ரன்வீருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் ரன்வீருக்கு ஆடைகளை அனுப்பும் நூதன போராட்டங்களும் நடத்தப்பட்டன.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு…
இதன் காரணமாக ரன்வீர் சிங்கின் நிர்வாண ஃபோட்டோ ஷூட் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விலங்குகளின் நலனுக்காக ரன்வீர் சிங் மீண்டும் நிர்வாண புகைப்பட ஃபோட்டோ ஷூட்டை நடத்த வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா கூறியுள்ளது.
இதுதொடர்பாக பீட்டா அமைப்பின் செய்தி தொடர்பு துணைத் தலைவர் சச்சின் பங்கெரா கூறியிருப்பதாவது-
விலங்குகளின் நலனுக்காக ரன்வீர் சிங் மீண்டும் நிர்வாண ஃபோட்டோ ஷூட்டை நடத்த வேண்டும். அவர் தற்போது நடித்து வரும் ராக்கி ஆர் ரானி கி ப்ரேம் கஹானி என்ற படத்தில் சைவம் மட்டுமே உண்பவர் கேரக்டரில் நடிக்கிறார்.
ரன்வீர் தொடர்ந்து வீகன் எனப்படும் சைவம் மட்டுமே உண்ணுதலை விளம்பரப்படுத்த வேண்டும்.
அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் கமல் - விஜய்... எவ்வளவு தெரியுமா?
மனிதர்களைப் போன்று விலங்குகளுக்கும் ரத்தம், சதை, எலும்பு, உணர்வு என எல்லாம் உள்ளன. விலங்குகள் எவையும் உயிரிழக்க விரும்பாது. மனிதர்களைப் போல விலங்குகளும் தங்களது குடும்பத்தினருடன் வாழுவதற்கு விரும்புகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.