ஜெயில் படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற வேண்டும் என
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு தற்போது வேறொரு நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் படிக்க - விரைவில் ராம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்தை தயாரிக்க 7 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ததன் மூலம் வசூலாகும் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமெனவும், அதில் இருந்து 7 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமை குறித்து நீதிமன்றம் அல்லது மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் அனுமதியின்றி தயாரிப்பு நிறுவனம் எந்த முடிவையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
Also read: 2021-ல் ட்விட்டரை தெறிக்க விட்ட விஜய்யின் பீஸ்ட்!இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.