சந்தானம் படத்தில் சூப்பர் ஹிட்டான கமல் பாடல்...!

டிக்கிலோனா

அண்மையில் வெளியிடப்பட்ட இந்த பாடலை இதுவரை 14 லட்சம் பார்வையாளர்கள் இணையத்தில் பார்த்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டிக்கிலோனா திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கை வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் ரீமேக் பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கை வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் ரீமேக் பாடல் இணைய தளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  யுவன் சங்கர் ராஜா இசையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த பாடல் 1990 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்றிருந்தது.

  Also read... Shoes of the Dead நாவலை விஜய்யை வைத்து படமாக்கும் வெற்றிமாறன்...?

  தற்பொழுது டிக்கிலோனா படத்திற்காக இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மீண்டும் ரீமேக் செய்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த பாடலை இதுவரை 14 லட்சம் பார்வையாளர்கள் இணையத்தில் பார்த்துள்ளனர்.  இதன் மூலம் இந்த பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. டிக்கிலோனா திரைப்படம் எதிர்வரும் 10ஆம் தேதி ஜீ5 வலைதளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vinothini Aandisamy
  First published: