Home /News /entertainment /

‘பொதுமக்கள் தங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ –வைரலாகும் அஜித்தின் அறிவுரை

‘பொதுமக்கள் தங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ –வைரலாகும் அஜித்தின் அறிவுரை

அஜித் குமார்

அஜித் குமார்

பொதுநல நோக்கத்தோடு அஜித் கூறியுள்ள அறிவுரை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொதுமக்கள் தங்களது காதுகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நடிகர் அஜித்குமார் அறிவுரை கூறியிருப்பது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்குமார், தற்போது எச்.வினோத் இயக்கும் தன்னுடைய 61வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். அதற்கான படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் நடிகர் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.  இந்த நிலையில் பொது நல நோக்கத்துடன் நடிகர் அஜித்குமார் மக்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அதில் மக்கள் தங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதியுடன் பிறந்த நாளை கொண்டாடிய மாளவிகா மோகனன்... புகைப்படங்கள் வைரல்

காதுகளில்  ஒரு வித சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால்,  காதுகளுக்கு பாதிக்கப்பட்டிருக்கும். எனவே மக்கள் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அந்த பிரச்சனை அதிக சத்தங்களை கேட்டுக் கொண்டிருப்பதாலும்,  தலையில் அடிபடுவதாலும், மருத்துவ பின் விளைவுகளாலும் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக காதுகளில் சத்தம் கேட்டால், அதை உடனடியாக கவனிக்கவும் என  அஜித் அக்கறையுடன் கூறியுள்ளார்.



பொதுநல நோக்கத்தோடு அஜித் கூறியுள்ள ஆலோசனை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கிறார்.

‘பொன்னியின் செல்வன் படம் உருவாகுவதற்கு பாகுபலிதான் முக்கிய காரணம்’ - மணிரத்னம்

அஜித் நடித்து வரும் 61-வது படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி