ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Anniyan Remake: சந்தேகம் தீர்ந்தது... அந்நியன் இந்தி ரீமேக்கை உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்!

Anniyan Remake: சந்தேகம் தீர்ந்தது... அந்நியன் இந்தி ரீமேக்கை உறுதிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்!

இயக்குநர் ஷங்கர் - ரன்வீர் சிங்

இயக்குநர் ஷங்கர் - ரன்வீர் சிங்

சர்ச்சைக் காரணமாக அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனை பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் காடா போக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2005-ல் விக்ரம், சதா நடிப்பில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதை தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

இந்தியன் 2 தயாரிப்பாளரான லைகாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியன் 2 படத்தை கைவிட்டு, தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்க ஆயத்தமான ஷங்கர், தெலுங்குப் படத்தைத் தொடர்ந்து இந்தியில் அந்நியன் படத்தை ரீமேக் செய்வதாக அறிவித்தார். ரன்வீர் சிங் விக்ரம் நடித்த வேடத்தில் நடிப்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்நியனை தமிழில் தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து அந்நியன் கதையை நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னுடைய அனுமதி இல்லாமல் ஷங்கர் எப்படி அதனை இந்தியில் ரீமேக் செய்வதாக அறிவிக்கலாம் என்று சண்டைக்கு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்நியன் படத்தின் மூலம் ஷங்கருக்கே அவர் தான் வாழ்வளித்தது போலிருந்தது ரவிச்சந்திரனின் அறிக்கை. அதற்கு பதிலளித்த ஷங்கர், அந்நியன் படத்தின் கதை என்னுடையது, வசனம் மட்டும்தான் சுஜாதா, படத்தின் கிரெடிட்டிலும் அப்படித்தான் உள்ளது. என்னுடைய கதையை எங்கு வேண்டுமானாலும் எடுப்பேன், அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றார். அதன் பிறகு ரவிச்சந்திரன் பக்கமிருந்து எந்த சத்தமும் இல்லை.

எனினும், இந்த சர்ச்சைக் காரணமாக அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனை பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் காடா போக்கியுள்ளார். இவர்தான் அந்நியன் இந்தி ரீமேக்கை தயாரிப்பதாக இருந்தது. நேற்று பென் ஸ்டுடியோஸ் அடுத்து தங்கள் தயாரிப்பில் திரையரங்கில் வெளிவரப்போகும் படங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அக்ஷய் குமாரின் பெல் பாட்டம், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய், ஜான் ஆபிரஹாமின் அட்டாக் படங்களுடன் அந்நியன் இந்தி ரீமேக்கும் அதில் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதை பென் ஸ்டுடியோஸ் உறுதிப்படுத்தியுள்னளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Ranveer singh, Director Shankar