Home /News /entertainment /

டி.பி.ராஜலட்சுமி முதல் சுதா கொங்கரா வரை - தமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்கள்!

டி.பி.ராஜலட்சுமி முதல் சுதா கொங்கரா வரை - தமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்கள்!

டி.பி.ராஜலட்சுமி - சுதா கொங்கரா

டி.பி.ராஜலட்சுமி - சுதா கொங்கரா

‘வணக்கம் சென்னை’, `காளி' ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார் கிருத்திகா உதயநிதி.

    சினிமாவில் பெண்கள் எளிதில் நடிகையாகிவிடலாம். ஆனால், இயக்குநராக ஒரு படத்தை கொடுப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. இச்சூழலில் தமிழ் சினிமாவில் உதித்த பெண் இயக்குனர்களை பற்றிய தகவல்களை இங்கே பதிவிடுகிறோம். 

    தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களின் பயணத்தில் முன்னந்தி ஏர் டி.பி.ராஜலட்சுமி. முதல் பெண் இயக்குநரான இவர் இயக்கிய திரைப்படம் ‘மிஸ் கமலா’. இவரின் இயக்கத்தில் அடுத்து வந்த ‘மதுரை வீரன்’ திரைப்படமும் வெற்றி கண்டது. டி.பி.ராஜலட்சுமி வரிசையில் பி.பானுமதி ’சண்டிராணி’ என்கிற படத்தையும், நடிகை சாவித்ரி ‘குழந்தை உள்ளம்’ என்கிற படத்தையும், விஜய நிர்மலா ’ராம் ராபர்ட் ரஹீம்’ என்கிற படத்தையும் இயக்கி பெண் இயக்குனர்களின் வரிசையில் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.

    அனுஹாசன், அரவிந்த் சாமி நடிப்பில் சுஹாசினி இயக்கிய ’இந்திரா’ திரை ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. குளிர் 100 டிகிரி என்ற படத்தை இயக்கி அனிதா உதீப்பும், பிரசன்னா, லைலா நடிப்பில் ‘கண்ட நாள் முதல்' மற்றும் ப்ரித்விராஜ், சத்யராஜ், ராதிகா நடிப்பில் `கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தை இயக்கி வி.ப்ரியாவும், ‘திரு திரு துறு துறு' படத்தை இயக்கி நந்தினியும், `வல்லமை தாராயோ', `கொலை கொலையா முந்திரிக்கா' மற்றும் `கே.டி. என்கிற கருப்பு துரை' ஆகிய படங்களை இயக்கி மதுமிதாவும் பெண் இயக்குனர்களில் தனித்து நின்றனர்.

    தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம்!

    `ஆரோகணம்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அடுத்து வந்த `நெருங்கிவா முத்தமிடாதே', `அம்மணி' மற்றும் `ஹவுஸ் ஓனர்' திரைப்படங்கள் திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. `3' மற்றும் `வை ராஜா வை' படத்தின் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், ரஜினிகாந்தின் ’கோச்சடையான்’ படத்தை இயக்கி சவுந்தர்யா ரஜினிகாந்தும் பெண் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தனர்.

    ‘வணக்கம் சென்னை’, `காளி' ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார் கிருத்திகா உதயநிதி. ’பூவரசம் பீப்பி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹலீதா ஷமீம் அடுத்ததாக இயக்கிய ஆந்தாலஜி படமான ’சில்லுக் கருப்பட்டி’ மற்றும் ‘ஏலே’ திரை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இயக்குனர் மணிரத்னத்திடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்த சுதா கொங்கரா தன்னுடைய முதல் திரைப்படமான ’இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அடுத்து இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வந்த ‘ சூரரை போற்று’ பெரும் வெற்றி பெற்று சுதாவையும் போற்ற வைத்தது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி