• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யோகி பாபு இண்டர்நேஷனல் நட்சத்திரமாகிடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

யோகி பாபு இண்டர்நேஷனல் நட்சத்திரமாகிடுவார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேய் மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு

பேய் மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு

யோகி பாபு இண்டர்நேஷனல் நட்சத்திரமாகிடுவார் என்று ’பேய் மாமா’ இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
யோகி பாபு நடிப்பில் வெளியாகவுள்ள 'பேய் மாமா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படம், முழுக்கமுழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

சென்னையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்ற பேய் மாமா இசை வெளியீட்டு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “நாங்களெல்லாம் படம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் அரசியல் படித்ததே தியேட்டர்களில்தான். எம்ஜிஆர் இறந்துபோவது போல வரும் 5 படங்களைத் தவிர அவரின் மற்ற எல்லாப் படங்களையும் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆக, சினிமாவும் தியேட்டர்களும் எங்களுக்கு முக்கியமானவை” என்றார்.

பேய் மாமா இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு


அவர் மேலும் கூறுகையில், ”கொரோனா கண்ணுக்குத் தெரியாத வைரஸ், அதேபோல் பேயும் கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் அந்தப் பேயை பேய்மாமா என்று ரசிக்குற படி படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். இந்தப் பேய் மாமா கொரோனாவை விரட்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ரொம்ப சந்தோசம். உலக அளவில் இந்தப் படத்திற்கு விருது கிடைக்கும்.

பேய் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாது. ஆனாலும் பேய் என்றால் பயம்தான். பேயை சப்ஜெக்டாக வைத்து கொரோனாவை ஒழிப்பேன் என்ற கதைக்கரு ஒரு நல்ல தீம். ஷக்தி சிதம்பரம் நல்ல சாதுர்யமானவர். அவர் எடுத்த நிறைய நல்ல படங்கள் உண்டு. இந்தப் படமும் ரொம்ப நல்லா வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்னதான் ஓடிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் படம் பார்ப்பதுதான் சுகம். வார இறுதி என்றாலே தியேட்டர்தான் பொழுதுபோக்கு. அதனால் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பயப்பட வேண்டாம். சீரியல் முதற்கொண்டு சினிமா சூட்டிங் வரை எல்லாவற்றுக்கும் அனுமதி படிப்படியாக கொடுத்தோம். அதேபோல் சினிமா தியேட்டர் திறப்பது பற்றி ஓரிரு நாட்களில் நல்ல முடிவுகளைச் சொல்வோம்.

இந்த பேய் மாமா படம் வெளிவரும்போது நிச்சயம் தியேட்டர்களில் கூட்டம் வரும். அதனால் யோகி பாபு, ஷக்தி சிதம்பரம் படத்தின் தயாரிப்பாளர் யாரும் கவலைப்பட வேண்டாம். கோவா பிலிம் பெஸ்டிவெலில் நமது தமிழ்ப்படங்களும் திரையிடப்படுவதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கும். நான் வருடம்தோறும் அங்கு போவேன். நம் படங்களுக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது. பேய் மாமா வித்தியாசமான கதைக்களம் உள்ள படம் என்பதால் இந்தப் படமும் கண்டிப்பாக பெஸ்டிவெலில் பேசப்படும். அதனால் யோகி பாபு இண்டெர்நேஷனல் ஸ்டார் ஆகிடுவார். இந்தப் படம் நல்ல சுவாரசியமா இருக்கும். எல்லாத்துறைகளைப் போல இந்தச் சினிமாத்துறையும் தன்னிறைவு பெற்ற துறையாக விளங்கும்" என்றார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: