ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவது தான் முதல்வர் ஸ்டாலினின் வலிமை - பிசி ஶ்ரீராம் புகழாரம்

மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவது தான் முதல்வர் ஸ்டாலினின் வலிமை - பிசி ஶ்ரீராம் புகழாரம்

பி.சி.ஸ்ரீராம் - மு.க.ஸ்டாலின்

பி.சி.ஸ்ரீராம் - மு.க.ஸ்டாலின்

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிசி ஸ்ரீராம் அவ்வப்போது நிகழ்கால சம்பவங்கள் குறித்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தன்னுடைய கருத்துக்களை பொதுவெளியில் அச்சமின்றி பேசியும், உத்தரவுகளை நேரடியாக வெளியிட்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் என்று தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் புகழ்ந்துள்ளார்.

  தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பிசி ஸ்ரீராம். 66 வயதாகும் அவர் மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தேவர் மகன் காதலர் தினம், அலைபாயுதே, வரலாறு, ரெமோ உள்பட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிசி ஸ்ரீராம் அவ்வப்போது நிகழ்கால சம்பவங்கள் குறித்து ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  இதனை திமுகவினர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். தனது ட்விட்டர் பக்கத்தில் பிசி ஸ்ரீராம் கூறியிருப்பதாவது-

  ஒருவர் தன் மனதில் உள்ளதை பொதுவெளியில் பேசுவதற்கு, அவருக்கு அதிக தைரியம் வேண்டும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவரிடமும் மனதில் உள்ளதை பொதுவெளியில் பேசுகிறார். எந்த அச்சமும் இன்றி வெளிப்படையாக பேசுவது, ஸ்டாலினின் வலிமையை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் அவர் உயர்ந்து நிற்கிறார். இவ்வாறு பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

  கடந்த சில வாரங்களாக தமிழக அமைச்சர்கள், பல்வேறு திட்டங்கள் குறித்து பேசி இருந்தது சர்ச்சையை உண்டாக்கியது. இதனடிப்படையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முனைகளில் இருந்து வரும் தாக்குதலுக்கு பதில் சொல்லக்கூடிய நிலையில் உள்ளேன். இந்த சூழலில் என்னை இன்னும் துன்பப்படுத்தும் வகையில், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் நடந்து கொண்டால் நான் யாரிடம் சொல்வது?

  ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த தமிழக தியேட்டர்ஸ்! கல்லா கட்டிய 2022!

  புதிய பிரச்சினை வந்து விடுமோ என்ற கவலை என்னை தூங்க விடாமல் செய்கிறது. செல்போன் மூன்றாவது கண் ஆகிவிட்டது. நீங்கள் எல்லோரும் கண்காணிக்கப்படுகிறீர்கள். சில நிர்வாகிகளின் செயலால் கழகம் அவமானத்தை சந்தித்துள்ளது. என்று கூறியிருந்தார்.

  அசத்தல் போட்டோக்களால் கிறங்கடிக்கும் பர்த்டே கேர்ள் பூஜா ஹெக்டே!

  அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது நிலையில் ஸ்டாலினை பிசி ஸ்ரீராம் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: CM MK Stalin, Kollywood