Home /News /entertainment /

நாட்டை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

நாட்டை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

பி.சி.ஸ்ரீராம்

பி.சி.ஸ்ரீராம்

சுதந்திர தினத்தையொட்டி, பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நான் இந்தியாவை நேசிக்கிறேன், அரசை அல்ல என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று காலை டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் பேசிய அவர், ”இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம்.

    அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை நனவாக்க வேண்டிய கடமை. நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அண்ணல் காந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், நேரு, சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நாட்டின் மீது பெரும் கனவுகளை சுமந்து போராடியவர்கள்அதோடு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

    எங்களுக்காக வருத்தப்பட வேண்டாம்... கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிக் பாஸ் வைஷ்ணவி



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சுதந்திர தினத்தையொட்டி, பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமரின் அழைப்பை ஏற்று, பலர் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றினர். இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ”நான் எனது நாட்டை நேசிக்கிறேன். ஆனால் அரசாங்கத்தை அல்ல. ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி