‘இந்தியன் 2’ படத்தில் நடனமாடுகிறேனா? - பயல் ராஜ்புத் விளக்கம்

தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பயல் ராஜ்புத்.

‘இந்தியன் 2’ படத்தில் நடனமாடுகிறேனா? - பயல் ராஜ்புத் விளக்கம்
நடிகை பயல் ராஜ்புத்
  • Share this:
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பயல் ராஜ்புத். பஞ்சாபி படத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் நடித்து வரும் பயல் ராஜ்புத்துக்கு ஆர்.எக்ஸ் 100 திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் டிஸ்கோ ராஜா திரைப்படத்தில் நடித்தார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ஏஞ்சல் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் பயல் ராஜ்புத் நடனமாட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.


ஆனால் இதை முற்றிலுமாக மறுத்திருக்கும் பயல் ராஜ்புத்,  "என்னைப் பற்றி எப்படி இவ்வாறான வதந்திகள் பரவுகின்றன என தெரியவில்லை. இந்தியன் 2, புஷ்பா ஆகிய படங்களில் நான் எந்த பாடலுக்கும் நடனமாடவில்லை. அப்படியான அழைப்புகளும் எதுவும் எனக்கு வரவில்லை. தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறேன். நான் நடிப்பது உறுதியானால் ரசிகர்களிடம் வெளிப்படையாக தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

 
View this post on Instagram
 

Travitude 🏖✈🛬🌝🌨🌈 P.s - Pics taken around 3 months back 🤪 last visit to HYD ♥️


A post shared by Payal Rajput (@rajputpaayal) on


பயல் ராஜ்புத்தின் இந்த சமூகவலைதள பதிவு அவரைச் சுற்றி வலம் வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading