Vakeel Saab: 3 வருடத்திற்குப் பிறகு வெளியாகும் பவன் கல்யாண் படம்!

Vakeel Saab: 3 வருடத்திற்குப் பிறகு வெளியாகும் பவன் கல்யாண் படம்!

வக்கீல் சாப்

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

  • Share this:
    இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

    இயக்குநர் வேணு ஸ்ரீராம் இயக்கியுள்ள பிங்க் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக், வக்கீல் சாப் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்ற கொண்டாத்தை உருவாக்கியுள்ளது. இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து, ஸ்ருதிஹாசன், நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    அமீதாப் பச்சனின் ரோலில் பவன் கல்யாண் நடித்துள்ளார். இருப்பினும், இந்தப் படம் பவன் கல்யாணின் வயதுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. வழக்கறிஞராக நடிக்கும் அவருக்கு, மனைவியாக ஸ்ருதி ஹாசன் சிறப்புத்தோற்றத்தில் நடிப்பார். கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களாக நிவேதா, அஞ்சலி மற்றும் அனன்யா ஆகியோர் நடிக்கின்றனர். அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும், அது எப்படி என்பது தான் படத்தின் கதை.



    இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. அதோடு கிட்டத்தட்ட 3 வருடம் கழித்து வெளியாகும் பவன் கல்யாணின் படம் என்பதால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: