ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Varisu: வாரிசு பாடல் வெளியீட்டு விழாவில் பவன் கல்யாண்?

Varisu: வாரிசு பாடல் வெளியீட்டு விழாவில் பவன் கல்யாண்?

விஜய் - பவன் கல்யாண்

விஜய் - பவன் கல்யாண்

ஆடியோ லாஞ்ச் பிரமாண்ட விழாவாக வரும் டிசம்பர் 24-ம் தேதி நடைப்பெறுவதாக பேச்சுகள் வலம் வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி ஆகியப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கர்ப்பமானதை ஏன் வெளியில் சொல்லவில்லை? ஷ்ரேயாவின் பதில்...

இதையடுத்து படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரமாண்ட விழாவாக வரும் டிசம்பர் 24-ம் தேதி நடைப்பெறுவதாக பேச்சுகள் வலம் வருகின்றன. அதில் தெகுங்கு நடிகர் பவன் கல்யாண் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் அது விஜய் மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pawan Kalyan, Thalapathy vijay