ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

2024 தேர்தல் வியூகம் : பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் சந்திப்பு

2024 தேர்தல் வியூகம் : பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் சந்திப்பு

பவன் கல்யாணுடன் சந்திரபாபு நாயுடு

பவன் கல்யாணுடன் சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார்.

ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் இன்று ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அவருடைய வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இரண்டு பேரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டுமே தேர்தல் கூட்டணி பற்றி அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது வழக்கம். ஆட்சியாளர்களின் அராஜக போக்கை இரண்டு கட்சிகளும் ஒன்றாக ஒரே குரலில் எதிர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்து இருக்கிறோம். தேர்தல் கூட்டணி என்பது மாற்றத்திற்கு உட்பட்டது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பவன் கல்யாண், '' 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும். எனவே அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அராஜக செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். எங்களுடன் தொடர்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் அரசியல் வியூகங்கள் பற்றி உட்கார்ந்து பேசுவோம்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் கட்சி தற்போது பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியாக இருந்தபோது அந்த மாநிலத்தில் மட்டுமே போட்டியிட்டது. இப்போது பெயர் மாற்றம் செய்து கொண்டு தேசிய அளவில் அரசியல் களம் காண அக்கட்சி முடிவு செய்துள்ளது. எனவே அந்த கட்சி ஆந்திராவில் போட்டியிடுவதை தவறாக கருத இயலாது என்றார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை தெலுங்கு தேசம், ஜனசேனா, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது

First published:

Tags: Chandrababu naidu, Pawan Kalyan