‘ஊதா கலரு ரிப்பன்’ பாடலுக்கு ரசிகரான பவன் கல்யாண்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் பவர் கல்யாண் கூறியுள்ளார்.

‘ஊதா கலரு ரிப்பன்’ பாடலுக்கு ரசிகரான பவன் கல்யாண்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..
சிவகார்த்திகேயன் | பவன் கல்யாண்
  • Share this:
ஜனசேனா கட்சித் தலைவரும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன் கல்யாண் செப்டம்பர் 2-ம் தேதி தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு அவர் நடித்த ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் ஷாப்’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் சில படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. மேலும் திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயனும் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்ட பவன் கல்யாண், “ உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்களின் ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலை நிறைய முறை கேட்டிருக்கிறேன்” என்றார்.

பவன் கல்யாணின் இந்த ட்வீட்டைப் பார்த்து நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன், “உங்கள் பதிலைப் பார்த்து அளவில்லாத மகிழ்ச்சியடைந்தேன். ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் உங்களுக்கு பிடித்திருந்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். நேரம் ஒதுக்கி அன்பை ஏற்றுக்கொண்டதற்கும் உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.கடந்த 2013-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் இடம்பெற்றிருக்கும். பாடலாசிரியர் யுகபாரதி வரிகளில் டி.இமான் இசையில் உருவான இந்தப் பாடல் அப்போது பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.
First published: September 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading