தெறி ரீமேக் படத்தில் நடிக்க வேண்டாம் என தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு தற்கொலை கடிதம் அனுப்பியுள்ளார் அவரது ரசிகர்.
தளபதி விஜய் கோலிவுட் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர், அவரது திரைப்படங்கள் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவரது தெறி படத்தின் ரீமேக்கில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் பவன் ரசிகர் ஒருவர் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி அவருக்கு தற்கொலை கடிதம் அனுப்பியுள்ளார்.
தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிப்பதாக செய்திகள் வெளியானது குறித்து அவரது தீவிர ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரீமேக்குகளைத் தவிர்த்து ஒரிஜினல் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அவர்களில் ஒருவர் இயக்குநர் ஹரிஷ் ஷங்கருக்கு தற்கொலைக் கடிதம் எழுதி, தெறி ரீமேக்கை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த ரீமேக் திட்டத்தைத் தவிர்க்க, "We Don't Want Theri Remake" என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர் ரசிகர்கள். அதோடு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனரை தங்கள் ஃபேவரிட் நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் நேரடி படங்களில் பணியாற்றும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!
இன்னொரு பக்கம் வாரிசு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் தளபதி விஜய். வம்சி படிப்பள்ளி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துடன் அஜித்தின் துணிவு படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay