Home /News /entertainment /

'பீம்லா நாயக்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு... பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்

'பீம்லா நாயக்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு... பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்

ஏற்கனவே பீம்லா நாயக்கின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமன் இசையமைப்பில் பாடல்களும் மிரட்டலாக அமைந்திருப்பதால், பீம்லா நாயக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மலையாளத்தில் மெகா ஹிட்டாகிய அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் ரிலீசாகும் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குனர் சாச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் 2020 பிப்ரவரி 7-ல் வெளியானது. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்தான் படத்தின் கதை.

    இதில் போலீஸ் அதிகாரியாக பிஜுமேனனும், முன்னாள் ராணுவ அதிகாரியாக பிரித்விராஜும் நடிப்பில் மிரட்டியிருப்பார்கள். சுமார் 3 மணிநேரம் ஓடும் இந்தப் படத்தை, சாச்சியின் திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது.

    தியேட்டருக்கு பின்னர் அமேசான் ஓடிடியில் படம் வெளியாக அங்கும் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் மற்ற மொழிகளில் அய்யப்பனும் கோஷியும் படத்தை ரீமேக் செய்ய பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினர்.

    தெலுங்கில் இந்தப்படம் ரீமேக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதன்பின்னர், பிஜுமேனன் கேரக்டரில் பவர் ஸ்டார் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கேரக்டரில் ராணா டகுபதியும் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்ட பின்னர், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    ஜனவரி மாதம் திரைப்படம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, பிப்ரவரி 25-ம்தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பீம்லா நாயக்கின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமன் இசையமைப்பில் பாடல்களும் மிரட்டலாக அமைந்திருப்பதால், பீம்லா நாயக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்., பிரபாஸின் ராதே ஷியாம் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் பெரிய பட்ஜெட் படமாக பீம்லா நாயக்கின் வெளியீடு தேதியை தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் அறிவித்துள்ளது.

    தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தையும், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Power Star pawan kalyan

    அடுத்த செய்தி