ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தில் அப்ளாஸ் அள்ளும் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம்!

துணிவு படத்தில் அப்ளாஸ் அள்ளும் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம்!

துணிவு மோகனசுந்தரம்

துணிவு மோகனசுந்தரம்

குடும்பம், வாழ்க்கை முறை மற்றும் சமூக விஷயங்களை நகைச்சுவையுடன் பார்வையாளர்களிடம் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தில் மைபா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் பார்வையாளர்களிடம் கைதட்டல்களை பெற்று வருகிறார்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். துணிவு படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று திரையரங்கில் வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

துணிவு படத்தில் நடித்திருக்கும் மோகனசுந்தரம், சொற்பொழிவாளர் சுகி சிவம் தலைமையில் பல பட்டிமன்றங்களில் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர். திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற விவாதத்தில் இவரை அடிக்கடி பார்க்கலாம். நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனம் நிறைந்த பேச்சுக்காக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். குடும்பம், வாழ்க்கை முறை மற்றும் சமூக விஷயங்களை நகைச்சுவையுடன் பார்வையாளர்களிடம் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்.

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!

சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் பட்டிமன்ற பேச்சாளராகவே நடித்திருந்த மோகனசுந்தரம், தற்போது துணிவு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியிருக்கிறார். படத்தில் மூத்த பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பைப் பெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Thunivu