Home /News /entertainment /

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் அப்டேட்… விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் அப்டேட்… விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்

பத்து தல பட இயக்குனர் கிருஷ்ணாவுடன் சிம்பு

பத்து தல பட இயக்குனர் கிருஷ்ணாவுடன் சிம்பு

சமீபத்தில் தந்தை டி.ஆரின். சிகிச்சை ஏற்பாடுகளை கவனித்த சிம்பு, தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் வெளியிட்டுள்ளது.

    கன்னடத்தில் மெகா ஹிட்டான முப்தி திரைப்படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கன்னடத்தில் இந்த படத்தில் ஹீரோவாக சிவராஜ் குமார் நடித்திருப்பார்.

    45-50 வயது மதிக்கத்தக்க டான் கேரக்டரில் சிவராஜ்குமார் நடிப்பில் மிரட்டி எடுத்திருப்பார். பெரும் வரவேற்பை முப்தி படம் பெற்ற நிலையில் அதன் ரீமேக் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    பத்து தல படத்திற்காக சற்று வயதான கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். அவர் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் மாஸ்ஸாக இருக்கும் என்பதால் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட் காத்திருக்கிறது.



    23 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி படத்தில் இணையும் ரம்யா கிருஷ்ணன்… ஜெயிலர் படத்தின் அப்டேட்…

    சமீபத்தில் தந்தை டி.ஆரின். சிகிச்சை ஏற்பாடுகளை கவனித்த சிம்பு, தற்போது பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது..

    பத்து தல படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஒபேலி கிருஷ்ணா இயக்கி வரும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.



    இந்நிலையில் பெல்லாரியில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக சிம்பு மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இடம்பெறும் ஃபோட்டோ வைரலாகியுள்ளது.

    கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை அனன்யா பாண்டே - வைரலாகும் போட்டோஸ்

    அடுத்தகட்டமாக படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து தல படத்தை வரும் டிசம்பர் 14ம்தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி