முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பதான் வெற்றியை தொடர்ந்து ஜவான் படப்பிடிப்பில் இணையவிருக்கும் ஷாருக்கான்!

பதான் வெற்றியை தொடர்ந்து ஜவான் படப்பிடிப்பில் இணையவிருக்கும் ஷாருக்கான்!

ஷாருக்கான்

ஷாருக்கான்

விஜய் சேதுபதி மற்றும் ப்ரியாமணியின் படப்பிடிப்பை பிப்ரவரியில் மீண்டும் தொடங்குவார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பதான் வெற்றியை தொடர்ந்து ஜவான் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணையவிருக்கிறார் ஷாருக்கான்.

பதான் படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்துள்ளார் ஷாருக்கான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்குடன் இணைந்து, தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியாவில் 100 கோடி ரூபாயை எளிதில் தாண்டியுள்ளது. பதான் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இயக்குனர் அட்லீ குமாரின் வரவிருக்கும் படமான ஜவான் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளளார் ஷாருக்கான்.

பிப்ரவரி 1 முதல் ஜவானின் படப்பிடிப்பை தொடங்கவுள்ள அவர், ஆறு நாள் ஷெட்யூலில் பெரிய ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்யா மல்ஹோத்ராவும் ஷாருக்கானுடன் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். அதே நேரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ப்ரியாமணியின் படப்பிடிப்பை பிப்ரவரியில் மீண்டும் தொடங்குவார்கள். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குனர் அட்லீ ஈடுபட்டுள்ளார். ஜவானின் சில பகுதிகளின் படப்பிடிப்பு மார்ச் 2023க்குள் முடிவடையும். மேலும் இதில் நயன்தாரா, யோகி பாபு, ரிதி டோக்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் வெளியாகும் ஷாருக்கானின் முதல் பான்-இந்தியன் திரைப்படமான இதை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் மூலம் கவுரி கான் தயாரிக்கிறார்.

இதற்கிடையில், ஷாருக் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை புரிந்து வரும் பதான் படத்தின் வெற்றி களிப்பில் இருக்கிறார். படம் வெளியான இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.215 கோடி வசூல் செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan