ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நான் பாஸிட்டிவாக இருக்கிறேன்... பதான் எதிர்ப்பு குறித்து ஷாருக்கான்!

நான் பாஸிட்டிவாக இருக்கிறேன்... பதான் எதிர்ப்பு குறித்து ஷாருக்கான்!

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் நடனமாடிய வீடியோ, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பதான் தேசப்பக்தி நிறைந்த திரைப்படம் என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள திரைப்படம் 'பதான்'. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் நடனமாடிய வீடியோ, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

"பாடலின் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை சரிசெய்யுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். முன்னதாக, தீபிகா படுகோனே ஜேஎன்யூவில் 'துக்டே துக்டே கேங்'க்கு ஆதரவாக நின்றார். அப்போது அவரது மனநிலை அம்பலமானது. 'பேஷாரம் ரங்' ஆட்சேபனைக்குரியது என்று நான் நம்புகிறேன். மேலும், காவி மற்றும் பச்சை நிறங்கள் ஆடைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஆட்சேபனைக்குரியது. அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், தவறினால் படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிட வேண்டுமா என்று யோசிக்க வேண்டியிருக்கும்" என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மிஸ்ரா கூறியிருந்தார்.

பதான் படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம் சவால்

இதையடுத்து பாஜக-வினரும், இந்து அமைப்பினரும் பதான் படத்துக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஷாருக்கானின் படங்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ள ஷாருக்கான், “பதான் என்ன மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேச பக்தி படம். சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் வலம் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan