முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வேறு தொழிலுக்கு செல்ல யோசித்தேன்... பதான் வாழ்க்கை கொடுத்துள்ளது.. ஷாருக்கான் உருக்கம்..!

வேறு தொழிலுக்கு செல்ல யோசித்தேன்... பதான் வாழ்க்கை கொடுத்துள்ளது.. ஷாருக்கான் உருக்கம்..!

ஷாருக்கான்

ஷாருக்கான்

பதான் திரைப்படத்தை அமைதியான முறையில் வெளியிடுவதற்காக பலரை அழைத்து பேசி அனுமதி கேட்க நேர்ந்ததாக நடிகர் ஷாருக்கான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

பாலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாகவே தொய்வை சந்தித்து வரும் வேளையில், ஷாருக்கானின் பதான் திரைப்படம் மீண்டும் பாலிவுட்டிற்கு புத்துயிர் பாய்ச்சியுள்ளது. அந்தவகையில் வெளியான 5 நாட்களில் பதான் திரைப்படம் 543 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 335 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 208 கோடி ரூபாயும் பதான் வசூலித்துள்ளது. இதனால் இந்தாண்டின் முதல் பாலிவுட் வெற்றிப்படமாக பதான் உருவெடுத்துள்ளது.

இந்தநிலையில் மும்பையில் நடைபெற்ற வெற்றிவிழாவில் ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷாருக்கான், படத்தை வெளியிட உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். படத்தை மகிழ்ச்சியாக வெளியிடுவதற்கான முயற்சிகளை சில கசப்பான சம்பவங்கள் சீர்குலைத்ததாக வேதனை தெரிவித்த ஷாருக்கான், ரசிகர்களின் மாபெரும் ஆதரவுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், “நாங்கள் படம் எடுப்பது அன்பையும் கருணையையும் பரப்புவதற்கே தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. கடந்த இரண்டு வருடங்களாக நான் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. எனது முந்தைய படங்களின் தோல்வியால் வேறு தொழிலுக்கு செல்லலாமா என்று கூட யோசித்தேன். உண்மையை சொல்லப்போனால் ரெஸ்டாரண்ட் தொடங்கும் என்னத்தோடு சமையல் கூட கற்றுக்கொண்டேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

ஆனால், பதான் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. தோல்வியடைந்த நேரத்திலும் என்னை நேசிக்க லட்சக்கணக்கானோர் இருந்தது எனக்கு கிடைத்த அதிருஷ்டம் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

First published:

Tags: Shah rukh khan