முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஷாருக்கான் இல்லம்.. பதான் குஷியில் குவிந்த ரசிகர்கள்.. பறக்கும் முத்தம் தந்து நெகிழ்ந்த ஷாருக்..!

ஷாருக்கான் இல்லம்.. பதான் குஷியில் குவிந்த ரசிகர்கள்.. பறக்கும் முத்தம் தந்து நெகிழ்ந்த ஷாருக்..!

ஷாருக்கான்

ஷாருக்கான்

"பதான்" படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், தனது இல்லத்தில் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ஷாருக்கான் நன்றி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 4 நாட்களில் 429 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. மேலும், அதிவேகமாக 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் இந்தி மொழி படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மேலும், கேஜிஎஃப்-2, பாகுபலி-2 சாதனைகளை முறியடித்துள்ளது.

இந்நிலையில், மும்பையின் மன்னாட் பகுதியில் உள்ள ஷாருக்கானின் இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் நேற்று மாலை குவிந்தனர். அப்போது, இல்லத்தின் பால்கனிக்கு ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்தபடி வந்த ஷாருக்கான், கையை அசைத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பறக்கும் முத்தத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது, ஷாருக்கான் இளைய மகன் ஆப்ராமும் உடனிருந்தார்.

First published:

Tags: Shah rukh khan