ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷாருக் கானின் ’பதான்’ படத்தில் சில காட்சிகளை மாற்றச் சொன்ன சென்சார் போர்டு!

ஷாருக் கானின் ’பதான்’ படத்தில் சில காட்சிகளை மாற்றச் சொன்ன சென்சார் போர்டு!

பதான்

பதான்

‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும் டூயட் பாடுகின்றனர். இதனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பதான் திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் மாற்றங்களைச் செய்ய மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் மெகா ஹிட்டான வார் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார்.

பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். மேலும் படத்தில் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதில் இடம்பெறும் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும் டூயட் பாடுகின்றனர். இதனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. இதனால் படத்தை தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.

Also read... WATCH: மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது... ராங்கி ஸ்னீக் பீக்!

இந்நிலையில், தணிக்கைக்குழுவின் சான்றிதழுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது, படத்தின் பாடல்கள் உட்பட சில காட்சிகளில் மாற்றங்களை செய்து, திருத்தப்பட்ட பதிப்பை சமர்ப்பிக்க மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது. இதனிடையே, இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Deepika padukone, Shah rukh khan