முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 27 நாட்கள்களில் ரூ.1000 கோடி... வசூலில் புதிய சாதனை படைத்த ஷாருக்கானின் பதான்!

27 நாட்கள்களில் ரூ.1000 கோடி... வசூலில் புதிய சாதனை படைத்த ஷாருக்கானின் பதான்!

பதான்

பதான்

ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார்.

இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த ஜனவரி 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.

பதான் திரைப்படத்திற்கு என்ன மாதிரியான விமர்சனம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கானுடன் இணைந்து சல்மான்கான் நடித்துள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகியுள்ள நிலையில், பதான் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய  இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் முன்னேற்றத்தைக் கண்டது. 4 நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்த படம் 8 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 667 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பதான் திரைப்படமானது வெளியாகி 27 நாட்களை கடந்த நிலையில் உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan