நடிகை பார்வதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவர் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிவித்திருக்கிறாரா என்று இந்த பதிவு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மரியான், பூ, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திலும் பார்வதி முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார்.
மலையாளத்தில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள பார்வதிக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அதிதி ராவின் ஹிட் தமிழ் பாடல்கள் ஒரு லிஸ்ட்!
பார்வதியின் இன்ஸ்டாகிராம் பதிவில், பிரெக்னன்ஸி கிட் மற்றும் அதில் கர்ப்பம் அடைந்திருந்தால் ஏற்படும் இரட்டைக் கோடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த படத்தை வெளியிட்டு, ‘அதிசயங்கள் ஆரம்பித்து விட்டன’ என்று கேப்ஷன் வைத்துள்ளார். பார்வதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அவரது பதிவு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி வருகிறது.
View this post on Instagram
பார்வதி தான் கர்ப்பம் அடைந்திருப்பதைத்தான் இப்படி கூறுகிறாரா என அவரது ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் தாய்மை அடைந்ததற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பார்வதி எந்த இடத்திலும் பேசியது கிடையாது. இந்நிலையில் தனது அடுத்த படமான ஒண்டர் வுமன் (wonder woman) படத்தின் புரொமோஷனுக்காக பார்வதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
View this post on Instagram
இதேபோன்று படத்தில் இடம்பெற்றுள்ள நித்யா மேனனும் இதே பதிவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஒண்டர் வுமன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்குகிறார்.
நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் ஒரு லிஸ்ட்!
கடைசியாக மம்மூட்டியுடன் புழு என்ற படத்தில் பார்வதி நடித்தார். இந்தப் படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதைத் தவிர்த்து இன்னும் சில தென்னிந்திய படங்களில் பார்வதி நடித்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Parvathy