நடிகர் சித்தார்த்தின் ட்வீட் தங்களுக்கு வருத்தம் தருவதாக பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவாலின் கணவர் பருப்பள்ளி கஷ்யப் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா என பலர் தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

சாய்னாவின் அந்த ட்வீட்டுக்கு, “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா” என்று பதிலளித்திருந்தார் நடிகர்
சித்தார்த்.
ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி
அவரின் இந்த பதிலுக்கு எதிராக கண்டனங்கள் வலுக்கத் தொடங்கின. தேசிய மகளீர் ஆணையம் சித்தார்த்துக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி பரிந்துரை செய்தது. இந்நிலையில், ’இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது... உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள் ஆனால் சிறந்த வார்த்தைகளை தேர்ந்தெடுங்கள். இப்படிச் சொல்வது அருமை என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.