ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குநர் ராமின் உதவியாளர் இயக்கியுள்ள பருந்தாகுது ஊர்க்குருவி!

இயக்குநர் ராமின் உதவியாளர் இயக்கியுள்ள பருந்தாகுது ஊர்க்குருவி!

பருந்தாகுது ஊர் குருவி

பருந்தாகுது ஊர் குருவி

வஞ்சகமும், சூழ்ச்சியும் ஒருபோதும் நிலைக்காது என்ற அடிப்படையில் உருவாகியுள்ள படம் பருந்தாகுது ஊர் குருவி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுமுகங்களின் முயற்சியால் உருவாகி இருக்கும் பருந்தாகுது ஊர்க்குருவி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

கற்றது தமிழ், தங்கம் மீன்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் என்பவர் பருந்தாகுது ஊர்குருவி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதில் மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்த விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவருடன் நிஷாந்த் ரூஷோ, காயத்ரி ஐயர் ஆகியோரும் புதுமுகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதி, போலீஸ் ஆகிய மூவரால் தேடப்படும் ஒரு இளைஞன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் காட்டுக்குள் சிக்கிகொள்ளும் அந்த இளைஞன் எப்படி தப்பிக்க போகிறான் என்ற கோணத்தில் திரைக்கதை அமைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேசமயம் வஞ்சகம், சூழச்சி ஆகியவை ஒருபோதும் நிலைக்காது என்ற கருத்தையும் முன் வைத்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களின் தொழில்நுட்ப முயற்சியால் எடுக்கப்பட்டிருக்கும் பருந்தாகுது ஊர்குருவி படம் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema