முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளையராஜா எம்.பி ஆனது பெரிய விஷயமே இல்லை.. ட்விஸ்ட் கொடுத்த பார்த்திபன்!

இளையராஜா எம்.பி ஆனது பெரிய விஷயமே இல்லை.. ட்விஸ்ட் கொடுத்த பார்த்திபன்!

பார்த்திபன் - இளையராஜா

பார்த்திபன் - இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா நாடாளுமன்ற எம்.பிஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், இசைஞானி இளையராஜா எம்.பி ஆன விஷயத்தை பற்றி மேடையில் பேசிய பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி, நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாகும் படம் 'வாரியர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வரும் ஜுலை 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் ‘புல்லட்’ சாங் சோஷியல் மீடியாவில் சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரிமாகியுள்ளது . இந்நிலையில் நேற்றைய தினம் ( ஜூலை 6) இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா சென்னையில் நடைப்பெற்றது.

தென்னிந்திய சினிமா ரூல் செய்ய பாலிவுட் கதிகலங்கியுள்ளது - நடிகர் விஷால்

இதில் 28 சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர்கள் பாரதிராஜா, பார்த்திபன், ஷங்கர், மணிரத்னம், நடிகர்கள் விஷால், ஆதி என தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து படம் குறித்தும் இயக்குனர் லிங்குசாமி குறித்தும் பல விஷயங்களை மேடையில் பதிவு செய்தனர். இந்த விழா நடந்து கொண்டு இருக்கும் போதே இசையமைப்பாளர் இளையராஜா நாடாளுமன்ற எம்.பிஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.

மாநிலங்களவை உறுப்பினராகும் இளையராஜாவுக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து!

இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய பிரபலங்கள் இளையராஜாவுக்கு கையோடு தங்களது வாழ்த்துக்களையும் பதிவு செய்தனர். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மேடை ஏறினார். அப்போது பேசிய அவர், ” இசைஞானி இளையராஜா எம்.பி ஆகிவிட்டார் என்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு MP, அதாவது Musical Paradise” என தனக்கே உரிய பாணியில் பேசிய கைத்தட்டல்களை அள்ளினார். பார்த்திபன் பேசிய இந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Parthiban, Ilayaraja, Music director ilayaraja, Rajya sabha MP