Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித் அப்படி நடித்தால் தியேட்டர் பட்டையைக் கிளப்பும் - பார்த்திபன்

அஜித் அப்படி நடித்தால் தியேட்டர் பட்டையைக் கிளப்பும் - பார்த்திபன்

பார்த்திபன் - அஜித்

பார்த்திபன் - அஜித்

ஜோக்கர் மாதிரி ஒரு ரோலில் அஜித் நடித்தால், தியேட்டரில் பட்டையைக் கிளப்பும் என பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல ஹாலிவுட் படமான ஜோக்கர் படத்தின் ஜோக்கர் மாதிரியான கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் பின்னி பெடலெடுத்து விடுவார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். துணிவு படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

துணிவு படத்தைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் அஜித்தின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக துணிவு படத்தில் ஜாலியான வில்லத்தனமான சிரிப்புடன் அஜித் நடித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் ஒரு நெகட்டிவ் சாயல் ரோல் என்பதால் ரசிகர்களுக்கு துணிவு பிடித்துப்போனது. குறிப்பாக ஹூயூமராக பேசுவதும், வங்கிக்குள் அஜித் ஆடும் நடனமும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. பலரும் இந்த நடனத்தை ஜோக்கர் படத்தில் ஹீரோ படிக்கட்டுகளில் ஆடும் நடனத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஹாலிவுட் படமான ஜோக்கரில் ஹீரோ வில்லத்தனமாக இருந்தாலும் ஜாலியாக படிக்கட்டுகளில் ஆடிக்கொண்டு வருவார். மிக பிரபலமான அந்த சீனுடன் துணிவு அஜித்தை ஒப்பிட்டு வருகின்றனர்.  ஆனால் இதனை எப்போது கணித்துவிட்டார் நடிகர் பார்த்திபன்.

சில வருடங்களுக்கு முன்பு, ஜோக்கர் மாதிரி ஒரு படத்தில் அஜித் நடித்தால் பின்னி பெடலெடுத்து விடுவார் என நடிகர் பார்த்திபன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “ஜோக்கர் மாதிரி ஒரு ரோலில் அஜித் நடித்தால், தியேட்டரில் பட்டையைக் கிளப்பும். அஜித் ஹீரோவாக மட்டுமல்ல, வில்லனாகவும் நடிக்கக் கூடிய அபரிமிதமான திறமை படைத்தவர்” எனத் தெரிவித்துள்ளார்.  பார்த்திபன் அஜித்தை சரியாக கணித்து வைத்துள்ளார் என அந்த வீடியோவை பலரும் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Parthiban